ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ டிரெய்லரை வெளியிட்ட கார்த்தி

0
85

ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ டிரெய்லரை வெளியிட்ட கார்த்தி

‘செக்கச்சிவந்த வானம்’ படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா கைவசம் ராதாமோகனின் ‘காற்றின் மொழி’ மற்றும் எஸ்.ராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. இதில் ‘காற்றின் மொழி’ படம், ‘துமாரி சுலு’ எனும் ஹிந்தி படத்தின் ரீமேக்காம். வித்யா பாலன் நடித்திருந்த ‘துமாரி சுலு’, பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டானது.

இப்படத்தை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்துள்ளார். நேஹா தூபியா கேரக்டரில் லக்ஷ்மி மஞ்சுவும், மனவ் கௌல் கதாபாத்திரத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர். சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம். ஏ.ஹெச்.காஷிப் இசையமைத்துள்ள இதற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார், பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டிரெய்லரை பிரபல நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற நவம்பர் 16-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.