விஜய் ஆண்டனி “காளி” திரை விமர்சனம்.!

0
258

விஜய் ஆண்டனிக்கு எப்போதும் தன் கனவில் ஒரு பாம்பு, மாடு தெரிகின்றது. அமெரிக்காவில் முன்னணி டாக்டராக இருக்கும் இவருக்கு ஒரு கட்டத்தில் நாம் வளர்ப்பு மகன் தான் என தெரிய வருகின்றது.

vijay-anthony-kaali_tamil360newz
vijay-anthony-kaali_tamil360newz

பிறகு தன் வளர்ப்பு பெற்றோர்கள் அனுமதியுடன் இந்தியா வர அங்கு தன் தாய் இறந்துவிட்டார் என தெரிகின்றது. அதே நேரத்தில் தன் தந்தை உயிருடன் இருப்பதை அறிந்த விஜய் ஆண்டனி தன் அப்பா யார் என்று தேடி செல்கின்றார்.

தன் தந்தை யார் தன் அம்மா ஏன் இப்படி ஆனார் என்பதை விஜய் ஆண்டனி கண்டுப்பிடிப்பதே மீதிக்கதை. படத்தின் முதல் பாதியில் பெரும் பங்கு வகிக்கிறார் யோகி பாபு. படத்தில் வரும் மூன்றாவது கதை அதில் சொன்ன விஷயம் கவர்கின்றது.

kaali_tamil360newz
kaali_tamil360newz

விஜய் ஆண்டனியின் இசை படத்திற்கு பிளஸ். காதல் காட்சிகள் எந்த இடத்திலும் படத்தோடு ஒன்றிய காட்சிகளாக அமையவில்லை. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மொத்தத்தில் ‘காளி’ சுவாரஸ்யம் குறைவு.