ஜோதிகா அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் உள்ளே.!

0
204

நாச்சியார் படத்துக்கு பிறகு ஜோதிகா மீண்டும் ராதாமோகன் இயக்குனருடன் கைகோர்த்துள்ளார். ஏற்கனவே ஜோதிகா, ராதா மோகன் இயக்கத்தில் மொழி படத்தில் நடித்தார். இப்படத்துக்காக தமிழக மாநில விருதை வென்றார்.

mozhi_tamil360newz
mozhi_tamil360newz

இந்நிலையில் ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற #Tumarisolu என்ற படத்தின் ரீமேக்கில் ராதாமோகன் ஜோதிகா இணைந்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு இப்படத்தின் தமிழ் பெயரை கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு நாள் ஜோதிகா வுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து செல்பி எடுத்துக்கொள்ளலாம் என்ற போட்டியை அறிவித்தனர்.

இந்நிலையில் இன்று இப்படத்தின் தலைப்போடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ராதாமோகன் படத்திற்கு காற்றின் மொழி என்ற பெயரை வைத்துள்ளார். இந்த தலைப்பு மொழி படத்தில் வரும் எல்லாருக்கும் பிடித்த பாடலின் வரி என்பது குறிப்பிடத்தக்கது.