பெட்ரோல் பங்கில் தோனி, பாரத் பந்திற்கு ஆதரவா..? வைரலாகும் புகைப்படம்

0
112

பெட்ரோல் பங்கில் தோனி பாரத் பந்திற்கு ஆதரவா..? வைரலாகும் புகைப்படம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக மிக வேகமாக ஏறிக்கொண்டிருப்பதை கண்டித்து நேற்று எதிர்க்கட்சிகளின் பாரத் பந்த் நடைபெற்றது. சென்னையில் நேற்றைய பந்த் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் வட இந்தியா உள்பட பல இடங்களில் பந்த் வெற்றி என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

dhoni in petrol bunk
dhoni in petrol bunkbharat bandh

இந்த நிலையில் நேற்று நடந்த பாரத் பந்த்தில் தோனி தனது குடும்பத்தினர்களுடன் கலந்து கொண்டார் என்று புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்று இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவியது. இதனால் எதிர்கட்சிக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு எதிராக தோனி களமிறங்கிவிட்டாரா? என்ற கேள்வியும் எழுந்தது.

dhoni in petrol bunk
dhoni in petrol bunk

இந்த நிலையில் தோனி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது அதில் தோனி குடும்பத்துடன் பெட்ரோல் நிலையம் ஒன்றில் உட்கார்ந்திருந்த புகைப்படம், அவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது எடுத்தது என்றும், நேற்றைய பாரத் பந்த்தில் தோனி கலந்து கொண்டதாக வெளிவந்த தகவல் முற்றிலும் வதந்தி என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்பின்னரே இந்த செய்தி நிஜமல்ல வதந்தி என்று இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.