என்ன தவறு செய்தேன்.! என்னை என் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.! புலம்பும் பிரபல கிரிக்கெட் வீரர்

0
146

என்ன தவறு செய்தேன்.! என்னை என் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.! புலம்பும் பிரபல கிரிக்கெட் வீரர்

வருகின்ற 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்க இருக்கிறது இந்த ஐபிஎல் ஏலத்தில் தன்னை எந்த அணியும் எடுக்காத காரணத்தினால் நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை என மனோஜ் திவாரி வருத்தத்துடன் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

ipl-teams
ipl-teams

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா என்றால் அது ஐபிஎல் தான் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது இதற்காக வீரர்களை ஏலம் எடுக்கும் படலம் நேற்றுமுன்தினம் முடிவடைந்தது அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தார்கள்.

இதில் 20 லட்சம் அடிப்படை தொகைகளிலிருந்த தமிழகத்தின் வருண்  சக்கரவர்த்தியை கிங்ஸ் லெவன் அணி 8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது, சென்னை அணி வருனை ஏலத்தில் எடுக்க முயன்றும் ஏலத்தில் எடுக்க முடியவில்லை,மேலும் மோகித் சர்மாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 கோடிக்கு எடுத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் ருட்டுராஜ் கைக்வாட் என்ற இளம் வீரரை 20 லட்சத்திற்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது இந்தநிலையில் மனோஜ் திவாரியை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை இதனால் தனது வருத்தத்தை ட்விட்டரில் கொட்டித் தீர்த்துள்ளார் அவர் கூறியதாவது இந்தியாவிற்காக பல சதங்களை அடித்துள்ளேன் பலமுறை ஆட்ட நாயகன் விருதுகளை பெற்றுள்ளேன் ஆனாலும் 14 போட்டிகளில் புறக்கணிக்கப்பட்டென், 2017ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளில் பல விருதுகளை வாங்கினேன் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்.