தோனியை சீண்டும் குட்டி பையன் ரிஷப் பண்ட் வீடியோ.! பேட்ட காட்ச்சியை வைத்து மரணமாய் கலாய்த்த CSK.!

0
66

தோனியை சீண்டும் குட்டி பையன் ரிஷப் பண்ட் வீடியோ.!

ஐ.பி.எல் தொடரின் மூலம் தனது திறமையை தோனியிடம் நிரூபிப்பேன் என்று இளம் வீரர் ரிஷப் பண்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் எனப்படும் இந்திய பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் 2008 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் பங்குபெற்று விளையாடி வருகிறார்கள்.

இந்தத் தொடருக்கான வீரர்கள், ஏலத்தின் மூலம் எடுக்கப்படுவதால், சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு கோடிகளில் ரூபாய் கொட்டுகிறது. இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது.

rishabh
rishabh

ஐ.பி.எல் தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஐ.பி.எல் தொடர் குறித்து இப்போது இருந்தே பேச துவங்கிவிட்டனர். ஐ.பி.எல் நிர்வாகமும் ஐ.பி.எல் தொடருக்கான விளம்பரங்களை தயார் செய்வதிலும், அதனை பிரபலப்படுத்தும் வேலையிலும் படுபிசியாக செயல்பட்டு வருகிறது.

அந்தவகையில், ஐ.பி.எல் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ரிஷப் பண்ட் கையில் தோனியின் சாதனைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை வைத்திருப்பது போலவும், அந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் பார்க்கும் ரிஷப் பண்ட், எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் தனது ரோல் மாடலான தோனியின் முன்னிலையில் தனது திறமையை நிரூபிப்பேன்” என்று நம்பிக்கையுடன் சென்னை கேப்டனான தோனிக்கே எச்சரிக்கை விடுக்கும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை ரிஷப் பண்ட் சார்ந்திருக்கும் டெல்லி டேர்டெவில்ஸ் ரசிகர்களை போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

Rishabh-Pant
Rishabh-Pant

தனது பேட்டிங் குறித்து ரிஷப் பண்ட் சமீபத்தில் கூறியதாவது;

எனக்கு சாதமாக ஒத்துவரும் சில விஷயங்கள் மற்றவர்களுக்கு சரியாக இருக்காது. அதேபோல் மற்றவர்களுக்கு ஒத்துவரும் விஷயங்கள் எனக்கும் பொருந்தும் என்று கூறமுடியாது. எனது ஆட்டத்தில்தான் எனது முழு கவனமும் உள்ளது. இப்போதைக்கு ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக கற்றுக்கொண்டேன். அதாவது, எந்த சூழலில் எப்படி ஆட வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன். அதேபோல சில நேரங்களில் நமது உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடாது என்பதையும் கற்றுக்கொண்டேன். நானும் ஆடுகிறேன் என்பதுபோல ஆடக்கூடாது. நன்றாக ஆடி ஸ்கோர் செய்து ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.