ஐபிஎல் 2018-ல் பிளே ஃஆப் சுற்றுக்கு அதிக வாய்ப்புகள் உள்ள அணி எது தெரியுமா.!

0
203

தற்பொழுது ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதுவரை நடைபெற்றுள்ள 41 ஆட்டங்களில் வெற்றி தோல்விகளுடன் ஹைதராபாத், சென்னை, பஞ்சாப், மும்பை ஆகிய நான்கு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடத்தை பிடித்துள்ளது.

ipl_tamil360newz
ipl_tamil360newz

கடைசி நான்கு இடங்களில் கொல்கத்தா, ராஜஸ்தான், பெங்களூர், டெல்லி அணிகள் உள்ளன. பிளே ஃஆப் சுற்றை நிர்ணயிக்க இன்னும் 15 போட்டிகள் மீதமுள்ள நிலையில் முதல் 4 இடங்களுக்குள் நுழைய, எந்த அணிக்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை இங்கே பார்க்கலாம்.

ஐபிஎல் பேட்ஸ்மேன்களுக்கான ஆட்டம் என்பதை மாற்றி பவுலர்களுக்கான ஆட்டம் என்பதை, ஹைதராபாத் அணி தொடர்ந்து நிரூபித்து வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளைப் பெற்றுள்ள சன்ரைசர்ஸ் அணி, எஞ்சியுள்ள 4 ஆட்டங்களில் 1 ஆட்டத்தில் வென்றால் கூட அதிகாரப்பூர்வமாக பிளே ஃஆப் வாய்ப்பினை உறுதி செய்துவிடும்.