தோனினாயா இருந்தா என்ன..? அவரும் அடிச்சாதான் டீம்ல இடம்.. தெறிக்கவிட்ட முன்னாள் கேப்டன்

0
79

தோனினாயா இருந்தா என்ன..? அவரும் அடிச்சாதான் டீம்ல இடம்.. தெறிக்கவிட்ட முன்னாள் கேப்டன்

தோனி எவ்வளவு பெரிய சாம்பியனாக இருந்தாலும் அவரும் அணியில் நீடிக்க வேண்டுமென்றால் நன்றாக ஆடி ஸ்கோர் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

Dhoni
Dhoni

இந்திய அணிக்கு ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி. இந்திய அணிக்காக பல கோப்பைகளையும் முக்கியமான தொடர்களையும் வென்று கொடுத்த தோனி, இன்றைக்கு ஃபார்மில்லாமல் தவித்துவருகிறார்.

கடந்த ஓராண்டுக்கு மேலாகவே சரியான பேட்டிங் ஃபார்மில்லாமல் தவித்துவரும் தோனி பல விமர்சனங்களுக்கு ஆளானார். அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐபிஎல்லில் அபாரமாக ஆடினார். அதனால் இனிமேல் தோனி சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதன்பின்னர் மீண்டும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து சொதப்பினார்.

ms-dhoni
ms-dhoni

அவரது பேட்டிங் அண்மைக்காலமாகவே மந்தமாக இருக்கிறது. எனவே அவரது ஃபார்மை கருத்தில் கொண்டு அவரது ஓய்வு குறித்த கருத்துகளை பலரும் தெரிவித்துவருகின்றனர். ஆனால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பையில் தோனியின் அனுபவமும் அவரது விக்கெட் கீப்பிங்கும் அணிக்கு தேவை என்பதால் அதுவரை கண்டிப்பாக தோனி ஆடுவார்.

ஆனால் அதேநேரத்தில் டி20 அணியிலிருந்து தோனி ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை அடுத்த ஆண்டு நடக்க உள்ளதால் அதில் தோனி ஆடவேண்டும் என்பதற்காக ஒருநாள் அணியில் உள்ளார். ஆனால் 2020ம் ஆண்டு நடக்க உள்ள டி20 உலக கோப்பை வரை தோனி ஆடுவது சந்தேகம் என்பதால் அவரது இடத்திற்கு ரிஷப் பண்ட்டை தயார்படுத்தும் விதமாக இப்போதே டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டார் தோனி. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் தோனி இல்லை.

ganguly
ganguly

தோனியின் ஓய்வு குறித்த விவாதங்கள் நடந்துவருவதோடு அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. உலக கோப்பைக்கு உள்ளாக அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்து சிறப்பாக ஆட வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில், தோனி குறித்து பேசிய முன்னாள் கேப்டன் கங்குலி, நமக்கு எவ்வளவுதான் அனுபவம் இருந்தாலும், எவ்வளவு வயதானாலும், அவையெல்லாம் ஒருபுறமிருக்க எப்போதுமே நாம் செய்யும் வேலையில் நமது திறமையை தொடர்ந்து நிரூபித்து கொண்டே இருந்தால்தான் இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

இல்லையென்றால் மற்றொருவர் நமது இடத்தை பிடித்துவிடுவார் என்பதே எதார்த்தம். எனவே தோனி சாம்பியனாக இருந்தாலும் அனைவரையும் போலத்தான் அவரும்.. அணியில் நீடிக்க வேண்டுமெனில் அவர் சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்ய வேண்டும் என்று அதிரடியாக கருத்து தெரிவித்த கங்குலி, தோனியால் இன்னும் பந்துகளை வெளியே தூக்கி அடிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.