சென்னையில் இனி IPL கிடையாது போராட்டத்தின் எதிரொலி.!

1
272

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று CSK-KKR இரு அணிகளும் முதல் முறையாக மோதிக்கொண்டன, நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது, போட்டி நடக்கும் முன்பு காவிரி, ஸ்டெர்லைட் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் IPL போட்டி நடத்த கூடாது என பல அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள்,இளைஞர்கள் என பலர் போராட்டங்கள் நடத்தினார்கள்.

csk
csk

அதுமட்டும் இல்லாமல் சென்னையில் முக்கிய சாலையான அண்ணா சாலையில் நேற்று தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்ததால் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்கு வருவதக்கு தாமதம் ஆனது. மேலும் போட்டி ஆரம்பித்த சில மணி நேரத்தில் மைதானத்தில் காலணிகள் வீசப்பட்டன அதனால் ஆட்டம் சுமார் 2 நிமிடங்கள் தடைபட்டது.

இப்படி தொடர் போராட்டங்கள் நடைபெறுவதால் சென்னையில் நடக்க இருந்த அனைத்து போட்டிகளும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன என தகவல் கசிந்துள்ளது. அப்படி அனைத்து போட்டிகளும் மாற்ற பட்டால் இந்த சீசனில் சென்னையில் நடைபெற்ற ஒரே போட்டி CSK-KKR போட்டியாகதான் இருக்கும்.