பாகிஸ்தானை பந்தாடியது இந்திய அணி

0
78

பாகிஸ்தானை பந்தாடியது இந்திய அணி | Ind vs Pak

மகளிருக்கான உலகக்கோப்பை டி-20 போட்டிகள் நடந்து வரும் நிலையில் நேற்று நடந்த முக்கிய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

Cricket
Cricket

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 133 ரன்கள் எடுத்தது. பிஸ்மா மரூப் 53 ரன்களும், நிடா டார் 52 ரன்களும் எடுத்தனர்.

அதன்பின் 134 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிதாலி ராஜ் 56 ரன்களும் மந்தனா 26 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியால் இந்திய மகளிர் அணி 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணியும் 4 புள்ளிகளை பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.