இந்தியன் 2 வை ஓரமாய் தூக்கிபோட்ட லைகா நிறுவனம்.! அதிர்ச்சியில் படக்குழு

0
82

Lycaa quit Indian2 project – இந்தியன் 2 படத்தை லைக்கா நிறுவனம் கை விடும் முடிவில் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

1996ம் ஆண்டு இந்தியன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. அதன்பின் 22 வருடங்களுக்கு பின் இந்தியன் 2 பட அறிவிப்பை ஷங்கர் அறிவித்தார். கமல்ஹாசன் நடிக்க, ரூ. 350 கோடி பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்தது.

ஆனால், ஷங்கரின் பட்ஜெட் குளறுபடிகள், தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பிஸியாக இருப்பது ஆகிய காரணத்தில் அப்செட் ஆன லைக்கா நிறுவனம் ஏறக்குறையை இந்தியன் 2-வை கை விட்டு விடும் முடிவுக்கு வந்து விட்டதாம்.

எனவே, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் படத்தை கைமாற்றும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டுள்ளாராம். ஆனால், முழுக்கதையை படித்து பார்த்த பின்பே படத்தை தயாரிப்பது பற்றி யோசிப்போம் என ரிலையன்ஸ் கூறிவிட்டதால், அதற்கான பணிகளில் ஷங்கர் ஈடுபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.