வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி

0
86

வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி | India vs West Indies

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்றவெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

jadeja cricket
jadeja cricket

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அந்த அணியில் கேப்டன் ஹோல்டர் 25 ரன்களும் சாமுவேல் 24 ரன்களும் எடுத்ததே அதிக ரன்களாகும். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி 31.5 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 104 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 14.5 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மா 63 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். கேப்டன் கோலி 33 ரன்கள் எடுத்தார்.

ஏற்கனவே ஒரு போட்டி டிராவான நிலையில், 3 – 1 என்ற கணக்கில் இந்தியா அணி தொடரை கைப்பற்றியுள்ளது.