நீயா.? நானா.? இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒருநாள் போட்டி வெற்றி யாருக்கு.?

0
80

நீயா.? நானா.? இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒருநாள் போட்டி வெற்றி யாருக்கு.? | India vs west indies cricket

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3 டி-20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகபட்டினத்தில் இன்று நடை பெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

virat and rayudu cricket
virat and rayudu cricket

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 4 ரன்களிலும் மற்றொரு ஆட்டக்காரர் தவான் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து விராட் கோலிவுடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். சிறப்பாக ஆடிய அம்பதி ராயுடு 73 ரன்களில் அவுட்டானார். தோனி தன் பங்கிற்கு 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 321 ரன்களை குவித்தது. கடைசி வரை ஆடமிழகமல் களத்தில் நின்ற விராட் கோலி 129 பந்துகளில் 157 ரன்கள் குவித்தார்.

322 என்ற எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. அந்த அணியின் ஹெட்மயர் சிறப்பாக விளையாடி 64 பந்துகளில் 94 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த அணியின் கேப்டன் ஹோப் சிறப்பாக விளையாடி சதமடித்தார். கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச வந்தார். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கேப்டன் ஹோப் ஃபோர் அடித்து மேட்சை சமன் செய்தார்.

Shai-Hope cricket
Shai-Hope cricket

இறுதிவரை ஹோப் ஆட்டமிழக்காமல் 134 பந்துகளில் 123 ரன்கள் குவித்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 321 ரன்கள் எடுத்தது. இரு அணிகளும் சமமான ரன்கள் எடுத்தால் வெற்றி தோல்வி இன்றி மேட்ச் முடிந்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்கிற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி அக்டோபர் 27 அன்று புனேவில் நடைபெறுகிறது.