பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா.! 38 ஓவரில் சுருண்ட நியூசிலாந்த்.!

0
48

பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா.! 38 ஓவரில் சுருண்ட நியூசிலாந்த்.!

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் கைப்பற்றியது இதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது நியூசிலாந்து-இந்திய அணிக்கு இடையேயான ஐந்து ஒருநாள் கொண்ட போட்டிகளில் முதல் போட்டி இன்று நேப்பியரில் நடைபெற்று வருகிறது.

india
india

இந்திய அணியில் தவான், ரோகித் சர்மா, கோலி, அம்பத்தி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது சமி, சாஹல்.
நியூசிலாந்து அணியில் குப்டில், மன்ரோ, வில்லியம்சன், டெய்லர், நிக்கோல்ஸ், டாம் லேதம், மிட்சல் சான்ட்னர், பிரேஸ்வெல், சவுதி, பெர்கியூசன், போல்ட்.

இந்த வருடம் உலக கோப்பை விரைவில் தொடங்க இருப்பதால் உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி வெளிநாட்டில் உள்ள ஆடும் கடைசி ஒருநாள் தொடர் என்பது அனைவரும் அறிந்ததே, அதனால் இந்தப் போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது அதனால் இந்திய அணி பந்து வீசியது .

முதலில் பந்து வீசிய இந்திய அணியை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது துவக்க வீரர் குப்தில் ஐந்து ரன்களும் முன்ரோ 8 ரன்னிலும் அவுட் ஆனார்கள், இப்படி ஒரு விக்கெட் ஆகிக்கொண்டே இருந்தது, மற்றொருபுறம் வில்லியம்ஸ் அரைசதத்தை கடந்தார் பின்பு வில்லியம்சன் 64 ரன்கள் எடுத்த நிலையில், குல்தீப் யாதவிடம் விக்கெட்டை இழந்தார்.

அதனால் ரன்ரேட் நியூசிலாந்துக்கு ஏறவில்லை கடைசிவரை நியூசிலாந்து அணி 38 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்தது, 38 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள் நியூஸிலாந்து இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கியுள்ளது இந்திய அணி.