இந்தியா vs நியூசிலாந்து ஒருநாள் தொடர்; இந்திய வீரர்களுக்கான ரேட்டிங் !!

0
44

இந்தியா vs நியூசிலாந்து ஒருநாள் தொடர்; இந்திய வீரர்களுக்கான ரேட்டிங் !!

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி மூன்று போட்டியிலும், நியூசிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் இருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி வெலிங்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 252 ரன்கள் எடுத்தது, இதனையடுத்து 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 217 ரன்களுக்கே நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி, 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் விளையாடிய இந்திய அணி வீரர்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர்களுக்கான ரேட்டிங் குறித்தும் இங்கு பார்ப்போம்.

ஷிகர் தவான் – 6/10

இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர் தவான் ஒரிரு போட்டிகளில் மட்டுமே தனது பங்களிப்பை சிறப்பாக செய்து கொடுத்தார். கடைசி இரண்டு போட்டிகளில் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.

ரோஹித் சர்மா – 7/10

கடைசி இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா, கடைசி இரண்டு போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார்.

விராட் கோஹ்லி – 8/10

இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லி, தனது பங்களிப்பை வழக்கம் போல மிக சரியாகவே செய்து கொடுத்தார்.

அம்பத்தி ராயூடு – 6/10

மிடில் ஆர்டரில் இந்திய அணியின் மிகப்பெரும் பலமாக அறியப்பட்ட அம்பத்தி ராயூடு கடைசி போட்டியை தவிர மற்ற எந்த போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.

சுப்மன் கில் – 4/10

விராட் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டதால் அவருக்கு பதிலாக இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறக்கப்பட்ட சுப்மன் கில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதில் சந்தேகம் இல்லை.

தோனி – 7/10

dhoni
dhoni

முன்னாள் கேப்டனான தோனி, கடைசி போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டார்.

தினேஷ் கார்த்திக் – 6/10

dk
dk

தினேஷ் கார்த்திக் ஓரளவிற்கு தனது பங்களிப்பை சரியாக செய்தார் என்றாலும் அவர் தன்னை மேலும் முன்னேற்றி கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

விஜய் சங்கர் – 7/10

இளம் வீரரான விஜய் சங்கர் தன்னை நிரூபிப்பதற்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தனக்கு கிடைத்த வாய்ப்பை விஜய் சங்கர் வீணடிக்கவில்லை.

கேதர் ஜாதவ் – 8/10

ஆல் ரவுண்டரான கேதர் ஜாதவ் குறை எதுவும் சொல்ல முடியாத அளவிற்கு இந்திய அணிக்கான தனது பங்களிப்பை மிகச்சரியாகவே செய்து கொடுத்தார்.

ஹர்திக் பாண்டியா – 9/10

கிட்டத்தட்ட இரண்டு மாத இடைவேளைக்கு பிறகு இந்திய அணியில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் ஹர்திக் பாண்டியா, இந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என அனைத்திலும் நெருக்கடியை ஏற்படுத்தினார்.