கடைசி விக்கெட்டை தூக்க தோனி- குல்தீப்பின் மாஸ்டர் ப்ளான்.! வைரலாகும் வீடியோ

0
134

கடைசி விக்கெட்டை தூக்க தோனி- குல்தீப்பின் மாஸ்டர் ப்ளான்.!

நேப்பியரில் நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் போட்டியில், இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சினால் நியூசிலாந்து அணி 157 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

india newz
india newz

ஆஸ்திரேயாவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்த இந்திய கிரிக்கெட் அணி அங்கிருந்து நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில், முதலாவது ஆட்டம் நேப்பியரில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்திய அணி: தவான், ரோகித் சர்மா, கோலி, அம்பத்தி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது சமி, சாஹல்.

நியூசிலாந்து அணி: குப்டில், மன்ரோ, வில்லியம்சன், டெய்லர், நிக்கோல்ஸ், டாம் லேதம், மிட்சல் சான்ட்னர், பிரேஸ்வெல், சவுதி, பெர்கியூசன், போல்ட்.

உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி வெளிநாட்டில் விளையாடும் கடைசி ஒரு நாள் தொடர் இது என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று தெரிவித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது.

போட்டியின் துவக்கம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். துவக்க வீரர்கள் குப்தில் 5 ரன்னிலும், முன்ரோ 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்த விக்கெட்டுகளை முகமது சமி கைப்பற்றினார். அதன்பின்னர் டெய்லர் (24), லாதம் (11) ஆகியோரை சாகல் வெளியேற்றினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தபோதும், கேப்டன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஸ்கோரை உயர்த்தவும் போராடினார். எனினும் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால், ரன்ரேட் உயரவில்லை. வில்லியம்சன் 64 ரன்கள் எடுத்த நிலையில், குல்தீப் யாதவிடம் விக்கெட்டை இழந்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி, 38 ஓவர் மட்டுமே தாக்கு பிடித்து 157 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், முகமது சமி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். சாகல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் ரோகிஷ் ஷர்மா வெறும் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குப்திலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையத்து ஷிகர் தவானுடன் விராட் கோலி கைகோர்த்தார். 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 44 ரன்கள் எடுத்திருந்தது.

அந்த நேரத்தில் பேட்ஸ்மேனின் கண்கள் கூசும் அளவிற்கு சூரிய வெளிச்சம் விழுந்தது. அதாவது நேப்பியரில் உள்ள கிரிக்கெட் மைதனாம் கிழக்கு- மேற்கு திசையில் இருப்பதால் சூரியன் வெளிச்சம் நேரடியாக பேட்ஸ்மேன்கள் கண்களை வந்து தாக்கும் நிலை உருவானது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது 49 ஓவர்களாக குறைக்கப்பட்டதோடு, இலக்கும் 156 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து விராட் கோலி 45 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதேசமயம் மறுமுனையில் ஷிகர் தவான் நிதானமாக ஆடி வந்தார். பின்னர் அம்பத்தி ராயுடு ஷிகர் தவனாடு கை கோர்த்தார். இதனையடுத்து இந்திய அணிய 34.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிகர் தவான் 75 ரன்களுடனும் (6 பவுண்டரிகள்), அம்பத்தி ராயுடு 13 ரன்களுடனும் கடைசி வரை அவுட் ஆகாமல் நின்றனர்.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை புகழ்ந்து தள்ளியுள்ளார்.