வெஸ்ட் இண்டீசை வெளுத்து வாங்கிய இந்திய அணி. ரோஹித், கோலி அபார சதம்

0
96

வெஸ்ட் இண்டீசை வெளுத்து வாங்கிய இந்திய அணி. ரோஹித், கோலி அபார சதம் | India vs west indies cricket

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3 டி-20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி குவாஹத்தியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

cricket
cricket

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கிரன் பவல் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இதையடுத்து இரண்டாம் விக்கட்டுக்கு இறங்கிய ஹெட்மயர் அடித்து ஆடி சிக்ஸர்களாக விளாசி சதமடித்தார். அவர் 106 ரன்களில் ஜடேஜாவின் பந்தில் அவுட்டானார். மற்ற வீரர்களும் சராசரியாக விளையாடினர். இறுதியில் அந்த அணி 50 ஓவர் முடிவில் 322 ரன்களை குவித்தது.

323 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் வெறும் 4 ரன்களுக்கு போல்டாகி வெளியேறினார். அதன்பிறகு ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி அடித்து ஆட தொடங்கினார். அடித்து ஆடிய இருவரில் கோலி முதலில் சதமடித்தார், பிறகு ரோஹித்தும் சதமடித்தார்.

இது கோலியின் 36வது சதமாகும் ரோஹித் ஷர்மா-க்கு 20வது சதமாகும். விராட் கோலி 140 ரன்கள் எடுத்திருக்கும் போது ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். மறுமுனையில் நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 152 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார்.

அபாரமாக விளையாடி சதமடித்த ரோஹித் ஷர்மா மற்றும் கோலியின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 42.1 ஓவரிலேயே 326 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 முன்னிலை வகிக்கிறது.