ரோஹித் ஷர்மாவின் ரன்னை கூட எடுக்க முடியாமல் திணறிய வெஸ்ட் இண்டீஸ் அணி

0
107

ரோஹித் ஷர்மாவின் ரன்னை கூட எடுக்க முடியாமல் திணறிய வெஸ்ட் இண்டீஸ் அணி | India vs west indies cricket

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடைபெற்றது. இதற்கு முன் நடைபெற்ற மூன்று போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. ஒரு போட்டி டை ஆனது. 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

india-vs-westindies cricket
india-vs-westindies cricket

சிறப்பான தொடக்கத்தை கொடுத்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து இறங்கிய விராட் கோலிவுடன் 16 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். பின்பு ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த அம்பதி ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

சிறப்பாக ஆடிய ரோஹித் ஷர்மா 137 பந்துகளில் 162 ரன்களும், அம்பதி ராயுடு 81 பந்துகளில் 100 ரன்களிலும் அவுட்டானார்கள். தோனி தன் பங்கிற்கு 23 ரன்களும் ஜாதவ் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 377 ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் 3 விக்கட்டுகள் வீழ்த்தினார்.

cricket
cricket

378 என்ற எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் எல்லா வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். கடைசி வரை போராடிய அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் 70 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 36.2 ஓவர்களில் அணைத்து விக்கட்டுகளையும் இழந்து 153 ரன்களில் அவுட் ஆனது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அஹ்மத் 3 விக்கட்டுகளும் யாதவ் 3 விக்கட்டுகளும் வீழ்த்தினார்கள். இதனால் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்கிற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நவம்பர் 1 அன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. தொடரை வெல்ல இந்திய அணியும் தொடரை சமன் செய்ய வெஸ்ட் இண்டீஸ் அணியும் தீவிரம் காட்டும் என்பதால் கடைசி போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.