நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்துள்ள ஐடியா வோடபோன் லிமிட்டெட் புதிய விலை பட்டியல் இதோ…

0
120

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்துள்ள ஐடியா வோடபோன் லிமிட்டெட் புதிய விலை பட்டியல் இதோ… | Idea Vodafone Limited New Recharge Price List

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக வோடபோன் ஐடியா லிமிட்டெட் உருவெடுத்துள்ளது. இந்த நிறுவனம் தற்போது ரிலையன்ஸ் ஜியோவிற்கு சமமான பலம் கொண்டு போட்டியளிக்கும் நிலைக்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

idea-vodafone-limited-new-recharge-price-list
Idea Vodafone Limited New Recharge Price List

ஒன்றிணைந்திருக்கும் இரு நிறுவனங்களும் டெலிகாம் சந்தையின் வருவாயில் 32.2% பங்குகளை கொண்டிருக்கும். வோடபோன் ஐடியா லிமிட்டெட் வாடிக்கையாளர் எண்ணிக்கை சுமார் 40 கோடியை எட்டியுள்ளது.

இந்நிலையில், வோடபோன் ஐடியா லிமிட்டெட் நிறுவனம் ஆல் ரவுன்டர் ரீசார்ஜ் சலுகையை வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. டாக்டைம் மற்றும் டேட்டா சலுகைகளுக்கான விலை பட்டியல் வெளியாகியுள்ளது.

ரீசார்ஜ் பட்டியல்:

1. ரூ.25 ரீசார்ஜ்: டாக்டைம்: ரூ.18, டேட்டா: 10 எம்பி, வேலிடிட்டி: 28 நாட்கள்
2. ரூ.35 ரீசார்ஜ்: டாக்டைம்: ரூ.26, டேட்டா: 100 எம்பி, வேலிடிட்டி: 28 நாட்கள்
3. ரூ.65 ரீசார்ஜ்: டாக்டைம்: ரூ.68, டேட்டா: 200 எம்பி, வேலிடிட்டி: 28 நாட்கள்
4. ரூ.95 ரீசார்ஜ்: டாக்டைம்: ரூ.95, டேட்டா: 500 எம்பி, வேலிடிட்டி: 28 நாட்கள்
5. ரூ.145 ரீசார்ஜ்: டாக்டைம்: ரூ.145, டேட்டா: 1 ஜிபி, வேலிடிட்டி: 42 நாட்கள்
6. ரூ.245 ரீசார்ஜ்: டாக்டைம்: ரூ.245, டேட்டா: 2 ஜிபி, வேலிடிட்டி: 84 நாட்கள்