பெரிதும் எதிர்பர்கபட்ட ஹானரின் புதிய மாடல் வெளியானது. பெஸ்ட் பட்ஜட் மொபைல்

0
126

பெரிதும் எதிர்பர்கபட்ட ஹானரின் புதிய மாடல் வெளியானது. பெஸ்ட் பட்ஜட் மொபைல் | Honor 8X

ஹவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் தனது அடுத்த புது மாடலான ஹானர் 8x ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஹானர் 8x (Honor 8X) ஸ்மார்ட்போன் மூன்று வேரியன்ட்களில் அமேசானில் பரிதியேகமாக அக்டோபர் 24 முதல் விற்பனைக்கு வருகிறது.

huawei honor 8x
huawei honor 8x

ஹானர் 8X | Honor 8X -ன் அம்சங்கள்

6.5″ இன்ச் முழு எச்.டி பிளஸ் வசதியுடன் கூடிய 1080×2340 பிக்சல் கொண்ட ஐபிஎஸ் டிஸ்பிளேவினை கொண்டுள்ளது. 2.2GHz க்வாடு கோர் மற்றும் 1.7GHz க்வாடு கோர் கொண்ட ஒரு ஹய்சிலிகான் கிரின்710 ஆக்டா கோர் செயலியை கொண்டு செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்டுள்ளது. அது மட்டுமின்றி தனியாக எஸ்.டி கார்டு மூலம் 400ஜிபி வரை விவரித்தும் கொள்ளலாம்.
ஹானர் 8x ஸ்மார்ட்போன் 20 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் பின்புற கேமராவும் முன்புறம் ஒரு 16 மெகா பிக்சல் கேமராவும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ் மூலம் இயங்கபடுகிறது. இந்த மொபைல் பின்புறம் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்டுள்ளது. பேஸ் அன்லாக் வசதி, வைஃபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ், என்.எப்.சி போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது. இந்த மொபைல் மைக்ரோ USB 2.0 மூலம் சார்ஜ் செய்யகூடிய ஒரு 3750 எம்.ஏ.எச் பேட்டரி கொண்டுள்ளது. huawei honor 8x
இந்தியாவில் மூன்று வேரியன்ட்களில் விற்பனைக்கு வரும் ஹானர் 8x ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ரோம் ரூ14,999, 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ரோம் ரூ16,999 மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம் ரூ18,999 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.