மே 22 முதல் ப்ளிப்கார்ட்டில்.! குறைவான பட்ஜெட் விலையில் ஹானர் 7ஏ.!

0
217

ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் பிராண்ட், வருகிற மே 22 ஆம் தேதி அன்று இந்தியாவில் அதன் ஹானர் 7ஏ ஸ்மார்ட்போனை விற்பனைக்கு வெளியிடவுள்ளது. வெளியான ஊடக அழைப்பிதழ்களின்படி, ஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7சி ஸ்மார்ட்போன்கள் வெளியீட்டு நிகழ்வில், அறிமுகப்படுத்தப்படும். அதில் ஹானர் 7ஏ ஆனது, பிரபல இ-காமர்ஸ் தளமான, ப்ளிப்கார்ட் வழியாக, பிரத்யேக விற்பனையை தொடங்கும்.

honor-7a_tamil360newz
honor-7a_tamil360newz

கடந்த சில நாட்களாக அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் டீஸ் செய்யப்பட்ட இந்த தகவலானது, தற்போது ப்ளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் வெளியான ஹானர் 7சி ஆனது, இந்தியாவில் சுமார் ரூ.9,235/-க்கு அறிமுகம் ஆகலாம் (3 ஜிபி ரேம் + 64 ஜிபி ரோம்), மறுகையில் உள்ள 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ரோம் மாறுபாடு ஆனது ரூ.13,345/-க்கு வெளியாகலாம். உடன் இந்திய விற்பனையை காணும், ஹானர் 7ஏ ஆனதும் சீனாவில் வெளியாகி விட்டது.

ஒரு இரட்டை கேமரா அமைப்பு மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ ஓஎஸ் உடன் கடந்த மாதம் தொடங்கப்பட்ட ஹானர் 7ஏ ஆனது, முன்புறத்தின் மேல் மற்றும் கீழ் பக்கங்களில் குறைந்த அளவிலான பெஸல்களை மட்டுமே கொண்டுள்ளது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இதன் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி உள் சேமிப்பு மாடல் ஆனது ரூ.8,250/-க்கும், 3 ஜிபி ரேம் மாடல் ஆனது ரூ.10,315/-கும் வெளியாக வாய்ப்புள்ளது.

huawei-honor-7a_tamil360newz
huawei-honor-7a_tamil360newz

பிளாக் கோல்ட் மற்றும் ப்ளூ வண்ண விருப்பங்களில் வரும் ஹானர் 7ஏ-ன் அம்சங்களை பொறுத்தவரை, 720 × 1440 பிக்சல்கள் அளவிலான எச்டிடி திரை தீர்மானம் கொண்ட ஒரு 5.7 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் 2.5டி கர்வ்டு கிளாஸ் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அட்ரெனோ 505 ஜிபியூ உடனான 1.5GHz ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

2 ஜிபி / 3 ஜிபி ரேம் கொண்ட 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி அதை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய நினைவகம் கொண்டுள்ள ஹானர் 7ஏ, எல்இடி பிளாஷ் மற்றும் இரண்டாம் நிலை 2 மெகாபிக்சல் சென்சார் கொண்ட 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டுள்ளது. அதாவது இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டு உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, எல்இடி பிளாஷ், எப் / 2.0 துளையுடனான 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. தவிர, ஒரு கைரேகை ஸ்கேனர் அமைப்பானது பின்புற கேமரா அமைப்பின் கீழே உள்ளது.

honor-7a_tamil360newz1
honor-7a_tamil360newz1

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயக்க முறைமையின் கீழ் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, ஹூவாய் எமோஷன் யூஐ 8.0 (EMUI) பயனர் இடைமுகத்தை கொண்டுள்ளது. இது ஒரு 3000 mAh நீக்க முடியாத பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. டூயல் சிம், 4ஜி வோல்ட், ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எஃப்எம் ரேடியோ போன்ற இணைப்பு ஆதரவுகளை வழங்குகிறது. அளவீட்டில் 152.4 x 73 x 7.8 மிமீ மற்றும் சுமார் 150 கிராம் எடையுள்ளதாக உள்ளது.