ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை லிரிகள் வீடியோ வெளியானது.!

0
93

ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை லிரிகள் வீடியோ வெளியானது.!

‘மீசைய முறுக்கு’ படத்துக்கு பிறகு ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘நட்பே துணை’. இப்படத்தை அறிமுக இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கி வருகிறார். இதனை பிரபல இயக்குநர் சுந்தர்.சி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘அவ்னி மூவிஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

hiphop-aathi
hiphop-aathi

இதில் ஆதி ஹாக்கி ப்ளேயராக வலம் வரவுள்ளாராம். ஆதிக்கு ஜோடியாக அனகா டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், முக்கிய வேடத்தில் இயக்குநர் கரு.பழனியப்பன் நடித்துள்ளாராம். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ஹிப் ஹாப் தமிழாவே இசையமைத்து வரும் இதற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். தற்போது, இந்த படத்தின் சிங்கிள் டிராக்கான ‘Kerala Song’-ஐ ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடல் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருவதோடு, ஹிப் ஹாப் தமிழா ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளது.