மஞ்சள் நிறத்தில் இவ்வளவு சத்துகள் உள்ளதா.!

0
28

மஞ்சள் நிறத்தில் இவ்வளவு சத்துகள் உள்ளதா.! | Health tips

மஞ்சள் நிறத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொண்டால் பல நன்மைகள் கிடைக்குமாம்.

health-tips
health-tips

வாழைப்பழம்:

வைட்டமின் எ, பி, சி, ஈ என அதிகமான அளவில் சத்துக்களை கொண்டது வாழைப்பழம். ஒரு வாழைப்பழத்தில் 450 மிகி அளவு பொட்டாசியம் இருக்கிறது. இது இதய நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாமல் காக்கும்.

மாம்பழம்:

வைட்டமின் எ இதில் அதிக அளவில் உள்ளதால் சருமத்தின் பொலிவை கூட்டும். மேலும் இதில் பாலிபினால்ஸ் என்ற மூல பொருள் புற்றுநோயை தடுக்கும்.

அன்னாச்சி பழம்:

அன்னாச்சி பழம் எலும்புகளுக்கு அதிக வலிமையை தரும். எதிர்ப்பு சக்தி குறைபாடு, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த பழம் சிறந்த மருந்தாகும். செரிமான பிரச்சினையும் தீரும்.

மஞ்சள் குடை மிளகாய்:

குடை மிளகாய் பல நிறங்களில் உள்ளது. மஞசள் குடை மிளகாயில் நார்சத்து, இரும்புசத்து, புரதம் போன்றவை உள்ளது.

எலுமிச்சை:

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் உடல் பருமன், அஜீரணம், நீர்சத்து குறைபாடு போன்றவற்றிற்கு உதவும். மேலும், கிட்னியில் கற்கள் உருவாகாமல் பாதுகாக்கும்.

சோளம்:

சோளத்தை உணவில் சேர்த்து அரிப்பு, சொறி போன்றவற்றை ஏற்படாமல் காக்கும். மேலும், சருமத்தின் பாதுகாப்பையும் அதிகரிக்கும்.