சுகாதாரத் திட்டங்களை நிறைவேற்ற உலக வங்கி கடன்.!

0
36

சுகாதார திட்டங்களை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு அரசுக்கு உலக வங்கி இரண்டாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளது.

இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது. தமிழ்நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் தொற்று நோய்களை குறைப்பதற்காகவும், தாய்-சேய் மருத்துவ சேவையை மேம்படுத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தை நிறைவேற்ற உலக வங்கி 2 ஆயிரத்து 9 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக உலக வங்கி, மத்திய அரசு ,தமிழக அரசு இடையே முத்தரப்பு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.