அரசு ஆசிரியர்கள் டியூசன் எடுத்தால் இனி ஆப்பு.! உச்சநீதிமன்றம் அதிரடி

0
103

Govt school teachers – அரசு வேலையில் இருக்கும் ஆசிரியர்கள் தனியாக டியூஷன் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

tution
tution

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி நேரம் முடிந்தவுட்சன் தங்கள் வீட்டில் சிறப்பு வகுப்புகள் (டியூஷன்) எடுப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. டியூஷனுக்கு வந்தால்தான் உனக்கு பாஸ் மார்க் போடுவேன். இல்லையேல் பெயில் ஆக்கி விடுவேன் என மிரட்டும் ஆசிரியர்கள் கூட இருக்கிறார்கள்.

இதனால், இவர்கள் பள்ளியில் மாணவர்களுக்கு சரியாக சொல்லிக் கொடுப்பதில்லை. பள்ளியில் கடமைக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு, சிறப்பு வகுப்பில் மட்டுமே அக்கறை எடுத்து பயிற்சி தருகின்றனர். இதற்காக மாதா மாதம் ஒவ்வொரு மாணவனிடமிருந்து கணிசமான தொகையை அவர்கள் வசூலிக்கிறார்கள்.

எனவே, இப்படிப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தனியாக டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசு ஆசிரியர்கள் அரசை மிரட்ட போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே, கருணை காட்டாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.