மாதவிடாய் சீக்கிரம் வருகிறதா.! அதற்க்கு இந்த உணவு தான் காரணம்.!

0
76

மாதவிடாய் சீக்கிரம் வருகிறதா.!

மாதவிடாய் வந்தாலும் கவலை, வரவில்லையென்றாலும் கவலை இந்த பெண்களுக்கு. மாதவிடாய் வர வேண்டிய நேரத்திற்கு வராமல் இருக்கும்போது ஹையோ ஏன் வரவில்லை என கவலை சூழ்ந்துகொள்வது ஏறக்குறைய எல்லாருமே சந்தித்திருப்பார்கள், சரியான நேரத்தில் வந்தால் நமது கர்ப்பப்பை நன்றாக செயல்படுகிறது என ஆசுவாசப்படலாம்.

சிலசமயம், மாதவிடாய் நாட்களில் ஏதாவது பூஜை, விசேஷங்கள் இருக்கும்போது, சீக்கிரம் வரகூடாதா என தோன்றும். அப்படி மாதவிடாய் வர காலங்காலமாக பலயுக்திகள் செய்து வருகின்றோம். குறிப்பாக உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது மாதவிடாய் சீக்கிரம் உண்டாகும்.

அதுபோல் சில உணவுகளும் நமது உடலில் வெப்பத்தையும், ஹார்மோன் தூண்டுதலையும் உண்டாக்கி, மாதவிடாயை துரிதப்படுத்துகிறது. அப்படியான உணவுகளை பார்க்கலாம்.

காஃபி

காஃபியில் இருக்கும் கஃபைன் ஈஸ்ட்ரோஜனை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் மாதவிடாய் சீக்கிரம் உண்டாகும். அதோடு மாதவிடாய் சமயத்தில் வரும் உடல் வலிகளையும் காஃபி போக்கும் என்று மகப்பேறு மருத்துவர் கூறுகின்றார்.

coffee
coffee

நட்ஸ்

நட்ஸ் கர்ப்பப்பையின் கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது. கை நிறைய நட்ஸ்களை சாப்பிடுவதால் கர்ப்பப்பை வலுப்பெறும், மேலும் முறையில்லாமல் மாதவிடாய் வரும்போது, தினமும் தொடர்ந்து பாதாம், முந்திரி, வால் நட் போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டு வரும்போது மாதவிடாய் சீராகும்.

nuts
nuts

பப்பாளி

பப்பாளி, மாம்பழம் போன்றவை கர்ப்பப்பைக்கு நன்மையளிப்பவை மட்டுமல்ல, உடலின் சூட்டையும் அதிகம் உண்டாக்குபவை. பப்பாளியை அதிகம் சாப்பிட்டு வ்ந்தால் விரைவில் மாதவிடாய் உண்டாகும்.

papali
papali

பேரிட்சை

பேரிட்சை பழங்களை தினமும் காலை 4 மாலை 3 என சாப்பிட்டு வந்தால் விரைவில் உண்டாகும். பாலில் பேரிட்சையைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் விரைவில் பலன் தெரியும்.

புளி

புளிக் கொழம்பு, வெந்தயக் குழம்பு, புளி சாதம் போன்று புளியை அதிகம் போட்டு செய்த உணவுகளை சாப்பிட்டால் விரைவில் மாதவிடாய் உண்டாகும்.puli