அட நம்ம காயத்ரி ஷங்கர் போலவே இருக்கும் ஆண்ட்ரே ரஸ்ஸல் மனைவி. புகைப்படத்தை பார்த்த காயத்திரியின் ரியாக்ஷன் இது தான்.

0
146

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் வாயிலாக நடிக்க வந்தவர் காயத்ரி. ஹீரோயின் தான் என்றில்லாமல் அணைத்து வகை ரோல்களையும் ரசித்து நடிப்பவர்.

சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் ஆகட்டும், கே 13 படத்தில் கெஸ்ட் ரோல் ஆகட்டும் இவர் சிம்பிலி சூப்பர் தான். சரி காயத்ரி ஷங்கர் இருக்கட்டும், வாங்க நாம விஷயத்துக்கு வருவோம்.

மேற்கிந்திய தீவுகளின் ஆல் ரௌண்டார் ஆண்ட்ரே ரஸ்ஸல். தற்பொழுது ஐபில் இல் கொல்கத்தா டீம் சார்பில் ஆடி வருகிறார். 31 வயது ஆகும் ரசல் கடந்த 2016 இல் ஜஸிம் லோரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் ஜமைக்காவில் மாடெலங்கில் இருப்பவர். தற்பொழுது 30 வயதாகும் இவர் இன்ஸ்டாகிராமில் பாஷன் லைப் ஸ்டைல் பற்றியும் போஸ்ட் செய்பவர்.

இந்த சீசன் ரசல் அவர்களின் அதிரடியால், கடந்த போட்டியில் மும்பைக்கு எதிராக மேன் ஆப் தி மேட்ச், விருதை பெற்றார். அப்பொழுது ஐபில் டி 20 இணையதளத்திற்கு இவர் மனைவி பேட்டி எடுத்தார். மேலும் தன் கணவரின் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்களையும் அப்லோட் செய்தார். நம் நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா, இவர் காயத்ரி போலவே இருப்பதாய் ஸ்டேட்டஸ், மீம்ஸ் தட்டி வந்தனர்.

அது போல ட்விட்டரில் ரசல் காயத்ரி ஷங்கரை திருமணம் செய்தது நமக்கு தெரியாம போச்சே, என்று போட்டோ அப்லோட் செய்ய. நம் ஹீரோயினும் என்னாது என கண்ணீர் ஸ்மைலி பதிலாக போட்டுள்ளார்.