கார்த்திக், விஷால், சிம்பு இணைந்து வெளியிட்ட எழுமின் படத்தின் ட்ரைலர்.!

0
182

கடந்த ஆண்டு (2017) கலையரசன் நடிப்பில் வெளியான படம் ‘உரு’. இப்படத்தை தயாரித்த வி.பி.விஜி இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். ‘எழுமின்’ என டைட்டிலிட்டுள்ள இதில் ஹீரோவாக ‘ஜனங்களின் கலைஞன்’ விவேக் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தேவயாணி டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், பல குழந்தைகள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ezhumin
ezhumin

இந்த படத்தை வி.பி.விஜியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வையம் மீடியாஸ்’ மூலம் தயாரித்து, இயக்குகிறார். கணேஷ் சந்திரசேகரன் இசையமைக்கும் இதற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார், கார்த்திக் ராம் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இது தமிழ் சினிமாவில் உருவாகும் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாம்.

தற்போது, படத்தின் டிரெய்லரை நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு மூவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லர் விவேக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. வெகு விரைவில் ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.