ஆண்கள் டை பெண்கள் கண்டிப்பாக துப்பட்டா.! அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு

0
40

தலைமை செயலகத்தில் பணிபுரியும் அரசு பெண் ஊழியர்கள் துப்பட்டாவும் ஆண் ஊழியர்கள் டையும் அணிய வேண்டும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான புதிய ஆடைக்கட்டுப்பாட்டு முறைகளுக்கான ஆடைக் கட்டுப்பாட்டு முறைகள் அரசாணை மூலம் வெளியாகியுள்ளன. இதனை நேற்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆடைக் கட்டுப்பாட்டு முறைகள் :-

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒழுக்கமான சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும், பெண்கள் புடவை அல்லது சல்வார் கமீஸ் அணியலாம், சல்வார் கமீஸ் அணிபவர்கள் கட்டாயமாக துப்பட்டா போட வேண்டும்
ஆண் ஊழியர்கள் கேஷுவலாக இல்லாமல் பார்மலான நல்ல உடைகளை அணியவேண்டும்,

நீதிமன்றம் அல்லது நீதித்துறை சார்ந்த மன்றங்களில் ஆஜராகும் போது கோட் அணிந்து செல்லவேண்டும். திறந்தவகையிலான கோட் அணிபவர்கள் கண்டிப்பாக டை அணிய வேண்டும். பெண்கள் புடவை மற்றும் துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கமீஸ் அணிய வேண்டும்.