ஆண்களின் ஆண்மை பிரச்சினையை குணப்படுத்தும் சின்ன விதைகள் பற்றி தெரியுமா..?

0
200

ஆண்களின் ஆண்மை பிரச்சினையை குணப்படுத்தும் சின்ன விதைகள் பற்றி தெரியுமா..?

இன்று பலரும் வருத்தப்படும் ஒரு முக்கியமான விஷயம் குழந்தையின்மையே. பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ ஏதேனும் குறைபாடு இருந்தால் அவர்களால் எளிதாக குழந்தை பெற இயலாது. இந்த பிரச்சினையால் இன்று பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு பல தீர்வுகளை தேடி நிம்மதியை இழந்தும் விடுகின்றனர்.

health tips
health tips

ஆனால் பல ஆயிரம் வருடத்திற்கு முன்னரே நம் முன்னோர்கள் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மருந்துகளின் மகத்துவத்தை நமக்கு வழங்கி சென்றுள்ளனர். இன்று நாம் அவற்றை பயன்படுத்தாமல் இருப்பதால் எண்ணற்ற நோய்களுக்கு ஆளாகின்றோம்.

பெண்களுக்கு எவ்வாறு சில வகையான குறைபாடுகள் இருக்கிறதே அதே போன்று ஆண்களுக்கும் சில வகையான குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக விந்து எண்ணிக்கை குறைவு, ஆண்மை குறைவு, மலட்டு தன்மை போன்ற பிரச்சணைகளை குணமாக்கும் சில அற்புதமான விதைகள் தான் இங்கு பார்க்கப்போகிறோம்.

பூசணி விதை

விந்து குறைவு பிரச்சினைக்கு ஒரு அருமையான தீர்வு இந்த பூசணி விதைகள். இதில் உள்ள அதிகப்படியான ஜின்க், விந்து உற்பத்திக்கு நன்கு உதவுகிறது. அத்துடன் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது.

நன்கு காய வைத்த பூசணி விதைகளை எடுத்து பொடியாக்கி, அதனை 1 கிளாஸ் பாலுடன் கலந்து தினமும் இரவு குடிக்க வேண்டும். இது ஆண்களின் விந்து குறைவை குணப்படுத்தும்.

முருங்கை விதை

இயற்கையாகவே முருங்கை மரத்தின் பயன்கள் எண்ணில் அடங்காதவை. முருங்கை காய் சாப்பிட்டால் எந்த அளவு ஆண்மை குறைவு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கிறதோ அதை விட அதிக நன்மைகள் இந்த முருங்கை விதைகளில் தருகிறது.

முருங்கை விதை, பூனைக்காலி விதை, இயற்கை சர்க்கரை ஆகியவற்றை சம அளவு எடுத்து கொண்டு பொடியாக்கி கொள்ளவும். பிறகு 5 கிராம் இந்த பொடியை எடுத்து 5 மில்லி அத்திப் பாலுடன் கலந்து 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்து எண்ணிக்கை சீராக அதிகரிக்கும்.

கொத்தமல்லி விதை

விந்து கோளாறு உள்ளவர்கள் நம்ம முன்னோர்கள் கடைபிடித்த இந்த மருத்துவத்தை கடைபிடியுங்கள். இது உடனடியாக நல்ல பலனை தர வல்லது. கொத்தமல்லி விதைகளை நன்றாக பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து கோளாறுகள் குணமடையும். மேலும் உடலுக்கு அதிக பலத்தையும் தரும்.

திரிபலா

ஆண்மை குறைவை போக்க ஒரு அருமையான மருந்து இந்த திரிபலா. ஆண்களின் விந்து குறைபாட்டை சீரான முறையில் அதிகரிக்க இது உதவும். திரிபலா என்பது கடுக்காய் ,

தான்றிக்காய் ,நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவையே. இந்த பொடியை எடுத்து கொண்டு அதனுடன் பனங்கற்கண்டை பொடி செய்து, பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு சார்ந்த பல கோளாறுகளுக்கு விடை கிடைக்கும்.

இலவம் விதை

இலவம் பழம் எந்த அளவிற்கு மருத்துவ குணம் கொண்டதோ அதே அளவிற்கு அதன் விதைகளும் அதிக மகத்துவம் வாய்ந்தது. இலவ மரத்தின் விதைகள், வெட்டிவேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து 5 கிராம் ஓமத்துடன் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும். பின் 1 கிராம் அளவு எடுத்து ஒரு கிளாஸ் பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

உளுந்து

ஆண்மை குறைவு சார்ந்த பல பிரச்சினைகளுக்கு உளுந்து அருமையான தீர்வு. பெண்களுக்கு மட்டுமன்றி ஆண்களுக்கும் இந்த விதை நல்ல வைத்தியமாக உள்ளது.

20 கிராம் உளுத்தம் பருப்பை எடுத்து அதனை நெய்யில் வறுத்து, பின் அதனுடன் 250 மி.லி பாலை கலந்து நன்றாக கிளறி, வேக விட்டு மிதமான சூட்டில் இதனை சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் விந்து எண்ணிக்கை அதிகரித்து உங்கள் இல்லற வாழ்வில் நலமாக இருக்கலாம்.

துளசி விதை

அதிக மருத்துவ குணம் கொண்ட பொருட்களில் முதன்மையான இடத்தில் இருக்கும் இந்த துளசி ஆண்மை குறைபாட்டிற்கும் பயன்படுகிறது. துளசியின் விதைகளில் விந்து உற்பத்தியை அதிகரிக்க செய்யும் தன்மை உள்ளது. 50 கிராம் துளசி விதைகளை எடுத்து கொண்டு,

அதனுடன் பனங்கற்கண்டு சிறிது சேர்த்து பொடியாக்கி கொள்ளவும். பிறகு தினமும் அதிகாலையில் 100 மி.லி பாலில் 6 கிராம் அளவு இந்த பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து பிரச்சினை குணமடையும்.

தொட்டாசிணுங்கி விதை

நம்மில் பலருக்கு தெரியாத ஒரு அற்புதம் இந்த தொட்டாசிணுங்கி செடியின் விதைகளுக்குள் ஒளிந்து கொண்டுள்ளது. இந்த விதைகளை எடுத்து அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து பொடியாக்கி, பாலுடன் கலந்து குடித்து வந்தால் விந்து உற்பத்தி சீராகும்.