திமுக தேர்தல் அறிக்கையை, தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.!

0
64

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின் வருமாறு

பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும். மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். பாலியல் குற்றங்களைத் தடுக்க உரிய சட்டம் நிறைவேற்றப்படும். வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். பேரறிவாளன் உள்ளிட்ட  பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலம், மதுரை, திருச்சி, கோவையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் பெண்கள் சிறு தொழில் தொடங்க 50 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.