வெடி வெடிக்கவே தடை போட்ட உச்சநீதிமன்றம்.

0
24

வெடி வெடிக்கவே தடை போட்ட உச்சநீதிமன்றம் | Diwali

தீபாவளி என்றால் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது புது ஆடைகளும், பட்டாசும்தான். வரும் நவம்பர் 6-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்க வேண்டும் என சிவகாசி பட்டாசு தொழிலாளர்களும் வழக்கு தொடர்ந்தனர்.

court diwali
court diwali

இன்று உச்சநீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க முழுமையாகத் தடை விதிக்க முடியாது மேலும் சில நிபந்தனைகளுடன் பட்டாசு விற்பனை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் :

மாசு குறைவாக உள்ள பட்டாசுகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். முறையாக லைசென்ஸ் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்யலாம். தீபாவளி நேரத்தில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பள்ளி, கல்லூரிகளில் காற்று மாசு குறித்த விழிப்பு மேற்கொள்ள வேண்டும்.

diwali
diwali

குழுக்களாக இணைந்து விழாக்களைக் கொண்டாடினால் காற்று மாசுபாடு வெகுவாகக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். ஆன்லைனில் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. புத்தாண்டு சமயங்களில் இரவு 11:45 முதல் 12:30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி. அதிக ரசாயனம் கலந்த பட்டாசுகள் விற்கத் தடை. அதிகளவில் சத்தம் ஏற்படுத்தும் பட்டாசு மற்றும் மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேல் கூறப்பட்டுள்ள விதிகளை எதிர்த்துச் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.