தல தோனியை போல் ஓடிச்சென்று கேட்ச் பிடித்த தினேஷ் கார்த்திக்.! வைரலாகும் வீடியோ

0
115

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின, கட்டாய வெற்றியை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி பேட்டிங்கில் சுத்தமாக சொதப்ப வெறும் 133 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து ஆடிய மும்பை அணி 16.1 ஓவரில் 134 ஓட்டங்கள் எடுத்து அசால்ட்டாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் பிடித்த கேட்ச் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் ஆட்டத்தின் 6-வது ஓவரின் முதல் பந்தை பவுன்சராக பிரசீத் வீச அதை எதிர்கொண்ட் குயிண்டன் டி காக் லெக் திசையில் அடித்து ஆட முயன்ற போது, பந்தானது மேலே தெர்த் மேன் இருக்கும் திசையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் அற்புதமாக ஓடிச் சென்று கேட்ச் பிடித்தார். இதைக் கண்ட வீரர்கள் மற்றும் கமெண்ட்டர்ஸ் இது ஒரு அற்புதமான கேட்ச், டோனி தான் இது போன்று பவுண்டரி லயனுக்கு சென்று பந்தை எல்லாம் பிடிப்பார், அது போன்ற ஒரு கேட்ச் என்று புகழ்ந்து தள்ளினர்.