மீண்டும் ஒரு மின்னல் வேக ஸ்டெம்பிங்.! கெத்து காட்டிய தோனி.!

0
59

மீண்டும் ஒரு மின்னல் வேக ஸ்டெம்பிங்.! கெத்து காட்டிய தோனி.!

நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் தோனி, மின்னல் வேக ஸ்டெம்பிங் செய்து மாஸ் காட்டியுள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் நேற்று காலை இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கியது.

india
india

டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக மார்டின் கப்டிலும் கோலின் முன்ரோவும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரை வீசிய ஷமி, அந்த ஓவரில் கப்டிலை போல்டாக்கி அனுப்பினார். இதையடுத்து தனது அடுத்த ஓவரிலேயே கோலின் முன்ரோவையும் 8 ரன்களில் போல்டாக்கினார். 4 ஓவரிலேயே முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி. தனது முதல் இரண்டு ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஷமி.

இதையடுத்து கேன் வில்லியம்சன் – ரோஸ் டெய்லர் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. அபாயகரமான இந்த ஜோடியை, பார்ட்னர்ஷிப் அமைக்கும் முன்னதாகவே நல்ல வேளையாக சாஹல் பிரித்துவிட்டார். 15வது ஓவரில் சாஹலின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் டெய்லர். 24 ரன்களில் டெய்லர் வெளியேற, டாம் லதாமும் சாஹல் பந்தில் அவரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதற்கிடையே 16வது ஓவரின் கடைசி பந்தில் விஜய் சங்கரின் பந்தில் வில்லியம்சன் கொடுத்த கேட்ச்சை கேதர் ஜாதவ் தவறவிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி களத்தில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்து தொடர்ந்து ஆடிவருகிறார் வில்லியம்சன். ஹென்ரி நிகோல்ஸ் 12 ரன்களில் கேதர் ஜாதவின் பந்தில் வீழ்ந்தார்.

இதில் நியூசிலாந்து வீரர் பெர்குசானை இந்திய முன்னாள் கேப்டன் தோனி மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றிய வீடியோ இங்கே; 38 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள் நியூஸிலாந்து இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கியது இந்திய அணி.இந்திய அணிய 34.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.