தோனி ரன் அவுட் இல்லையா.? சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் வீடியோ.! ரசிகர்கள் ஃபீல்

0
75

csk : மும்பை அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் டோனியின் ரன் அவுட் தான் இப்போது சமூகவலைத்தளங்களில் பெரிய விவாதமாக சென்று கொண்டிருக்கிறது.

ஏனெனில் ஆட்டத்தின் 12-வது ஓவரின் 3-வது பந்தை ஹார்திக் பாண்ட்யா வீச, அதை எதிர்கொண்ட வாட்சன் லெக் திசையில் அடித்து விட்டு ஓடினார்.அப்போது அங்கு பீல்டிங் செய்த மலிங்கா ரன் அவுட்டிற்காக த்ரோ செய்ய, அப்போது அங்கு பீல்டர் இல்லாததால், டோனி மீண்டும் இரண்டாவது ரன்னிற்கு ஓடினார்.

ஆனால் அப்போது அந்த பந்தை பிடித்த இஷான் கிஷான் அற்புதமாக ஸ்டம்பை நோக்கி எறிந்ததால், அவுட் க்ளைம் செய்யப்பட்டது. இது மூன்றாவது நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டது.அப்போது இதைக் கண்ட மூன்றாவது நடுவர் அவுட் என்று கூற, மும்பை ரசிகர்கள் மைதானத்தில் துள்ளிக் குதித்தனர்.

ஆனால் ஒரு ஆங்கிள் இருந்து பார்க்கும் போது, டோனி கிரிசின் உள்ளே வந்தது போன்று தான் இருந்ததாக கூறி, சென்னை ரசிகர்கள் அது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.