என்ன ஒரு வெறித்தனம் வைரலாகும் தோனியின் புகைப்படம்.!

0
127

dhoni : சென்னை அணியின் தலைவரான டோனி, நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை ஓவியமாக பேருந்தில் வரைந்திருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏனெனில் சென்னை, மும்பை, டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.

dhoni
dhoni

நான்காவது அணிக்கான ரேசில் ஹதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் உள்ளன. இதில் ஹைதராபாத் அணி நேற்றைய பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் தோல்வியை சந்தித்ததால், இன்று இரவு மும்பை அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் ஹைதராபாத் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும், அதே சமயம் கொல்கத்தா வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக தகுதி பெறும்.

இந்நிலையில் சென்னையின் தலைவரான டோனியின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் டோனி, ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியின் போது மைதானத்தின் உள்ளே வந்து நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

dhoni
dhoni

இது பெரிய அளவில் பேசப்பட்டது. அதை தமிழகத்தை சேர்ந்த பேருந்து ஒன்றில் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. அதில் டோனி ஆக்ரோசத்துடன் நடுவரிடம் கையை நீட்டி காட்டுவது போன்று உள்ளது.