தனுஷ் இல்லாமலேயே பூசணிக்காய் உடைத்த படக்குழு..! இந்த பிரச்சனை தான் காரணம்.!

0
90

தனுஷ் இல்லாமலேயே பூசணிக்காய் உடைத்த படக்குழு..! இந்த பிரச்சனை தான் காரணம்.!

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் நீண்டகாலத் தயாரிப்பாக இருந்து வருகிறது. இந்தப்படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

dhanush
dhanush

தனுஷின் அண்ணனாக சசிகுமாரும் அவரது மனைவி வேடத்தில், சுனைனாவும் இப்படத்தில் நடித்துள்ளனர். கவுதம் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்ட்மென்ட், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி.மதன் இணைந்து தயாரித்துள்ளனர்..

2016-ம் ஆண்டு தொடங்கிய இப்படம் பல மாதங்கள் முடங்கிக்கிடந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பில் சசிகுமார் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

தனுஷ் இல்லாமலே பூசணிக்காய் உடைக்கப்பட்டது. சம்பள பாக்கி விஷயத்தில் தனுஷ், கவுதம்மேனன் இடையில் பிரச்சனை இருப்பதால், சசிகுமாரின் காட்சியை அதிகப்படுத்தி படத்தை முடித்துள்ளதாக கூறப்படுகிறது.