தனுஷின் தேவதையை கண்டேன் பாணியில் ஏமார்ந்த காதலன்.! போலீஸில் புகார்

0
73

தனுஷின் தேவதையை கண்டேன் பாணியில் ஏமார்ந்த காதலன்.! போலீஸில் புகார்

காதலித்து ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்ணீர்விட்டுக் கதறிய வாலிபர் ஒருவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இம்மானுவேல்.

Devathaiyai_kanden
Devathaiyai_kanden

இவர் கடந்த 5 வருடங்களாக தன்னுடன் நெருக்கமாகப் பழகிய காதலி தன்னை ஏமாற்றிச் சென்றுவிட்டதால் மன உளைச்சலில் இருப்பதாகவும் இதுகுறித்து காவல்துறையிடம் புகாரளித்தும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அழுது புலம்பினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஐந்து வருடங்களாகக் காதலித்த பெண்ணை 2017ஆம் ஆண்டு திருமணம் செய்தேன். திருமணத்தை சட்டப்படி பதிவு செய்யவில்லை. ஆனால், அவர் என்னிடம் நெருங்கிப் பழகியதற்கு ஆதாரம் அனைத்தும் என்னிடம் உள்ளது. திருமணம் ஆன சில நாட்களில் அவர் என்னை பிரிந்துவிட்டார். அவரது குடும்பத்தார் என்னை பேச்சு வார்த்தைக்காக என்று அழைத்து அடி பின்னவிட்டனர்.” என்று கூறினார்.

தொடர்ந்து, “இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் புகாராக தெரிவித்தும், என்னை காதலித்து ஏமாற்றியவர் மீதும், தாக்கியவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மனதளவும் உடலளவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, என் காதலி மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றார்.