கார்த்தி நடிக்கும் தேவ் படத்தின் கதை இதுதான்.! அப்போ எல்லாமே இருக்கு.!

0
98

கார்த்தி நடிக்கும் தேவ் படத்தின் கதை இதுதான்.! அப்போ எல்லாமே இருக்கு.!

கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் ‘தேவ்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், நடிகை ராகுல் பிரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார்.

dev
dev

இந்த படத்தை பற்றி தனியார் பத்திரிக்கைக்கு இயக்குநர் ரஜத் ரவி சங்கர் அளித்த பேட்டி ஒன்றில் “தேவ்” வில் எல்லாம் கிடைக்கும். அதுதான் இந்த படத்துடைய தனித்துவம். ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் ஒரு கதை இருக்கும். ஒருவரை ஆழமாக பார்த்தால் அது கதை. அவனுடைய வீடுவரை தேடிச்சென்றால் அது களம். ‘தேவ்’வின் கதை அவர் என்ன விரும்புகிறார், அவருடைய நட்பு வட்டாரம், காதல், உணர்வு, உணர்ச்சி, அடிதடி எல்லாம் கலந்திருக்கிறது.

நாம் எப்படி வளர்ந்தோம் என்று நம் அனைவரிடத்திலும் ஒரு கதை இருக்கும் அல்லவா அதுதான் ‘தேவ்’. இந்த படத்தில் கார்த்திக் அவ்வளவு அருமையாக பொருந்துகிறார். அவரது வாழ்க்கையில் ஓர் இழப்பு ஏற்படுகிறது, அதை அவர் எப்படி கடந்து வருகிறார் என்பதுதான் கதை.