டெல்லியை மரணமாய் கலாய்த்து ட்வீட் போட்ட CSK அணி.!

0
110

விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை-டெல்லி அணிகள் மோதின.

ஏழு ஆண்டுகளுக்கு பின் இந்த வருடம் தான் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதால், அந்தணி சென்னை அணிக்கு கடும் போட்டியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது எல்லாம் ஒன்றும் கிடையாது, என்பது போல் சென்னை அணி வீரர்கள் டெல்லி அணியை கதறவிட இறுதியாக அந்தணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

அதன் பின் ஆடிய சென்னை அணிக்கு துவக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டூபிலிசிஸ் சிறப்பான ஆட்டத்தை கொடுத்ததால், சென்னை அணி எந்த வித நெருக்கடியும் இல்லாமல் வெற்றியை நோக்கி சென்றது.

அப்போது இரண்டு வீரர்களும் 50 ஓட்டங்கள் எடுத்த நிலையில், அம்பத்தி ராயுடுவுடன், ரெய்னா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், டோனிக்கு எங்கு வாய்ப்பு இல்லாமல் போகுமோ என்ற போது ரெய்னா 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அடுத்து வந்த தல டோனி 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஏமாற்ற இறுதியாக சென்னை அணி 19-ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப் போட்டிக்கு சென்னை இதோ 8-வது முறையாக தகுதி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இறுதிப் போட்டி மும்பையுடன் என்பதால், சென்னை அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் “வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்” என்று MI என்பதை மட்டும் குறிப்பிட்டு காண்பித்து மும்பை அணியை கலாய்த்துள்ளது.