மீண்டும் தர்பார் படத்தின் படபிடிப்பு வீடியோ இணையதளத்தில் லீக்.! செம்ம மாஸாக நடந்துவரும் ரஜினி

0
155

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தில் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ரஜினி நடிக்கும் 167 வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

படத்தை லைக்கா நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது, மேலும் இசையமைப்பாளராக அனிருத்தும், ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணியாற்றி வருகிறார், பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.

மேலும் படப்பிடிப்பு மும்பையில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி படக்குழு அதிர்ச்சியடைய செய்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும், போலீஸ் வாகனத்தில் இருந்து ரஜினி இறங்கி ஸ்டைலாக நடந்து வரும் காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது படக்குழுவினரை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.