8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் ஸ்பின்னர் வருண் எந்த படத்தில் நடித்துள்ளார் தெரியுமா ?

0
165

8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் ஸ்பின்னர் வருண் எந்த படத்தில் நடித்துள்ளார் தெரியுமா ?

தமிழகத்தை சேர்ந்த மிஸ்டரி ஸ்பின்னர். கடந்த ஆண்டு வரை டிவிஷன் நான்கில் ஆடியவர்.தஞ்சாவூரை சேர்ந்தவர். இளம் வயதில் இருந்தே கிரிக்கெட் ஆடியவர். 13 வயதில் விக்கெட் கீப்பர் பாட்ஸ்மான் ஆக இருந்தவர். அதன் பின்னர் SRM யூனிவர்சிடியில் B Arch படித்தார், பின்னர் இரண்டு வருடம் முழு நேர வேலை.

CV-Varun
CV-Varun

பின்னர் க்ளப் கிரிக்கெட் என்று இருந்தது இவரின் கிரிக்கெட் பயணம். வேகப்பந்துவீச்சாளாராக மீண்டும் தொடங்கினார், முட்டியில் காயம் ஏற்பட ஸ்பின் பக்கம் மாறினார். கெட்டதிலும் நல்லதாக அது அமைந்தது இவருக்கு.

க்ளப் கிரிக்கெட்டில் அசத்தினார், பின்னர் சி எஸ் கே டீம்மின் நெட் பௌலர் வாய்ப்பு வந்தது. சென்ற ஐபில் இல் சென்னையின் மேட்சுகள் புனேவுக்கு மாறியது. அந்தநேரத்தில் தினேஷ் கார்த்திக் வாயிலாக கொல்கத்தா அணி நெட் பௌலர் வாய்ப்பு கிடைத்தது. பல யுத்திகளை கற்றார். சுனில் நரேனின் சந்திப்பு, நல்ல பயிற்சி தளம் அமைய தன்நம்பிகை கூடியது. TNPL போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ஆடினார்.

நன்றாக விளையாட முறையே ரஞ்சிக்கோப்பை, விஜய் ஹசாரே போட்டியிலும் ஆடினார். அசத்தினார் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஐபில் இல் ஹாட் கண்டெஸ்டண்ட் ஆக மாறினார்.

இடைப்பட்ட காலத்தில் சில படங்களை எடிட் செய்துள்ளார். அதுமட்டுமன்றி சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் 2014 இல் வெளியான ஜீவா படத்தில் கிரிக்கெட் வீரராகவே நடித்தும் உள்ளார்.