சூப்பர் டீலக்ஸ் பாணியில் ட்வீட் போட்ட ஹர்பஜன்.! அட மாஸ் காட்டுறாரே பா

0
93

IPL போட்டியில் நேற்று சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்தின. ரசிகர்களின் கரகோஷத்திற்கிடையில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து சென்னை அணி 175 ரன்கள் எடுக்க பக்க பலமாக இருந்தார் கேப்டன் தோணி.

மேலும் பந்து வீச்சும் பலமாக இருந்ததால் 8 ரன்கள் வித்தியாசத்தில் RRயை வீழ்த்தியது CSK.இதனால் எப்போதும் சென்னை அணி வெற்றி பெற்றவுடன் அந்த அணி வீரர் ஹர்பஜன் சிங் வெளியிடும் கலக்கலான ட்விட்டை தற்போதும் வெளியிட்டுள்ளார்.

இதில் விஜய் சேதுபதியின் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான சூப்பர் டீலக்ஸ் படத்தின் மாஸான அந்த டிரைலர் வசனத்தை பதிவிட்டது மட்டுமில்லாமல் அந்த வசனத்திற்காக விஜய் சேதுபதிக்கும் நன்று தெரிவித்துள்ளார் ஹர்பஜன்சிங்.

ஆனால் ஹர்பஜன் சிங் நேற்றைய ஆட்டதில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இம்ரான் தாகிர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.