ராஜஸ்தான் அணியை கதற விட்ட CSK அணி.! வாட்சன் அதிரடியால் அபார வெற்றி.!

0
134

IPL தொடரின் 17 வது ஆட்டம் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது இதில் சென்னை சூப் கிங்ஸ் அணியும் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இதில் தாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

CSK-team-ipl-2018
CSK-team-ipl-2018

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது இதில் வாட்சன் 106 ரன்களும் , ராயுடு 12 ரன்களும், ரெய்னா 46 ரன்கள், தோனி 5 ரன்கள், பில்லிங்ஸ் 3 ரன்களும் எடுத்தார்கள் அடுத்ததாக களம் இறங்கிய பிராவோ தனது அதிரடி ஆட்டத்தால் மீதி ரன்களை குவித்தார்.

205 ரன் எடுத்தால் வெற்றி என களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 140 ரன்களுக்குள் மொத்த விக்கெட்டையும் பரி கொடுத்து சுருண்டது இதில் கிளாசன் 7 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரகானே 16 ரன்னில் ஆட்டமிழந்தார். பட்லர் 22 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் சிறப்பாக விளையாடிவந்த ஸ்டோக்ஸ் 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.இறுதியில் ராஜஸ்தான் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சென்னை அணியின் வாட்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின்மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.