ஏலத்தில் இவரை எடுங்க ப்ளீஸ் ! சி எஸ் கே கோச், நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைக்கும் ரசிகர்கள்.

0
119

ஏலத்தில் இவரை எடுங்க ப்ளீஸ் ! சி எஸ் கே கோச், நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைக்கும் ரசிகர்கள்.

இரண்டு வருடம் தடை முடித்து, இந்த அணி கம் பேக் கொடுத்ததுடன், கொப்பரையும் தட்டி சென்றது. இம்முறை ஏலம் டிசம்பர் 18 நடக்கிறது. நிர்வாகம் கனிஷ்க் சேத் மற்றும் கிஷிட்ஸ் சர்மா என்ற இளம் வீரர்கள் மற்றும் இங்கிலாந்தின் மார்க் வுட் என இந்த மூவரையும் ரிலீஸ் செய்து விட்டனர்.

csk

cskஇந்நிலையில் சென்னை அணி, அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான அணியில் இவர்கள் தக்க வைத்துள்ள 23 வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வயதான, வலுவான, ஷார்ப்பான அணி என்றே தங்களை சொல்லி வருகின்றனர். 8.40 கோடி பணம் உள்ளது இவர்களிடம். சென்ற சீசன் பாலன்ஸ் 6.5 கோடி மற்றும் புதிதாக இந்த சீசனுக்கு 2 கோடி.இந்நிலையில் ட்விட்டரில் பலர் யுவராஜ் சிங்கை எடுங்க அவர் தோணி பார்ட்னெர்ஷிப் நாங்க பாக்கணும்.

 

சிஎஸ்கேவுக்கு தேர்வானா இந்திய டீம்மிலும் கம் பேக் ஆவர் ராயுடு மாதிரி என்றெல்லாம் சொல்லி வருகின்றனர்.

கடந்த சீசன் 2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணிக்கு விலை போன இவரை, அந்த நிர்வாகம் ரிலீஸ் செய்துள்ளது. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.