நீ Australian னாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு எப்போதும் தமிழ்நாட்டின் சிங்கமாகதான் திகழ்வாய்.!! வைரலாகும் வாட்சன் வீடியோ

0
69

இறுதிப்போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிய வாட்சன் 80 ரன்கள் எடுத்து தனி ஒருவனாக அணியை வெற்றி பெற முயற்சி செய்தார். ரன் எடுக்க வாட்சன் ஓடியபோது டைவ் அடித்த போது அவரத் காலில் காயம் ஏற்பட்டது.

ஆனால், அதை அவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை. அவர் அவுட் ஆனபின்னரே இந்த விவகாரம் மற்றவர்களுக்கு தெரியவந்தது. அவரது காலில் 6 தையல்கள் போடப்பட்டது. இதையடுத்து, ரத்த காயங்களுடன் அவர் விளையாடும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வாட்சனை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மேட்ச் முடிந்து அவர் ஊருக்கு திரும்புகையில், தாங்கள் தங்கும் இடத்திலிருந்து மைதானத்திற்கு போட்டியின் போது பேருந்தில் அழைத்து வரும் தமிழகத்தை சேர்ந்த ஓட்டுனரை அவர் கட்டித்தழுவி விடை பெற்ற வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து, உன் சொந்த ஊர் ஆஸ்திரேலியா என்றாலும் நீயும் தமிழனே என நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://www.facebook.com/100004125780448/videos/1427672587380254/