சென்னை மக்கள் பீதி.! துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசப்பட்ட பெண்.!

0
70

சென்னை மக்கள் பீதி.! துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசப்பட்ட பெண்.!

சென்னை குப்பை கிடங்கில் கைகள் தனித்தனியாகவும் கால்கள் தனித்தனியாகவும் கனகச்சிதமாக பார்சல் செய்து வீசப்பட்ட இளம் பெண்ணின் உடலை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார் மாநகராட்சி ஊழியர்கள். பெருங்குடியில் மிகப்பெரிய குப்பை கிடங்கு இருக்கிறது சென்னையில் இருக்கும் ஒட்டுமொத்த குப்பையில் கொட்டப்படும் இப்படி கொட்டப்பட்ட குப்பையில் தான் வித்தியாசமான பார்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த குப்பை கோடம்பாக்கத்திலிருந்து கொண்டுவரப்பட்டது என தெரிவித்துள்ளார்கள்.

murder-chennai
murder-chennai

அந்த பார்சலை  மாநகர ஊழியர்கள்  பார்த்த பொழுது அதில் கை, கால்கள்  என அனைத்தும் துண்டு துண்டாக வெட்டப்பட்டு   பார்சல் செய்து வீசப்பட்டுள்ளது இந்த பார்சலில் உடல் பகுதி மட்டும் காணவில்லை இது ஒரு பெண்ணின் சடலம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனே பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்கள்.

இந்த தகவலை அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள் கொலை செய்யப்பட்ட பெண் கோடம்பாக்கத்தை சேர்ந்தவரா அல்லது வேற பகுதியை சேர்ந்தவர் என்ற தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது கொலை செய்யப்பட்ட பெண் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணாக இருக்கும் என தெரிகிறது அது மட்டுமில்லாமல் அவரது கையில் இரண்டு பச்சை  குத்தப்பட்டுள்ளது.

murder-chennai
murder-chennai

மேலும் இந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யபட்டிருக்கலாம் என சந்தேக படுகிறார்கள் போலீசார்கள், அதுமட்டும் இல்லாமல் இதன் உடல் பகுதியை தீவிரமாக தேடி வருகிறாகள்.இப்போதைக்கு கால், கை மட்டும் கிடைத்துள்ளதால், கையிலுள்ள ரேகை எடுத்து பார்த்து, ஆதாருடன் பொருத்தி பார்த்தால்தான் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதும், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதும் தெரியவரும். அது சம்பந்தமான முயற்சியில் போலீசார் இறங்கி வருவதுடன், பெண்ணின் உடல் எங்கே உள்ளது என்றும் தேடி வருகிறார்கள்.