`எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு ஓட்டுமொத்தமாக தடை விதிக்க நேரிடும்’ – சென்னை உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

0
95

`எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு ஓட்டுமொத்தமாக தடை விதிக்க நேரிடும்’ – சென்னை உச்சநீதிமன்றம் எச்சரிக்கை | Chennai High Court Protest State Government Due to 8 Ways Project

‘சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டக் கூடாது என்ற உத்தரவை, தமிழக அரசு மீறியுள்ளதால், திட்டத்தை ஏன் ஓட்டுமொத்தமாக தடை விதிக்க கூடாது’ என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Chennai High Court Protest State Government Due to 8 Ways Project
Chennai High Court Protest State Government Due to 8 Ways Project

சென்னை-சேலம் பசுமைவழிச் சாலை திட்டம் தொடர்பான பொதுநல வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள், சிவஞானம் மற்றும் பவானி சுப்ராயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், கல்வாரயன் மலையில் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகக் கூறி, புகைப்பட்டங்களை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தனர். முன்னதாக, பசுமைவழிச் சாலை திட்டம்குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், “சுற்றுச்சுழலுக்காக மத்திய அரசின் அனுமதி வழங்கப்படாதபோது, நீங்கள் எப்படி, மக்களுடைய நிலங்களை உட்பிரிவு செய்யலாம்” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், “அரசு அதிகாரிகளின் நிலங்களைக் கையகப்படுத்தினால்தான் மக்களின் வலி உங்களுக்கும் புரிந்துயிருக்கும். காஞ்சிபுரத்தில் ஒரு மரத்தை வெட்ட அனுமதி வாங்கி, 109 மரங்களை வெட்டியுள்ளீர்கள். மரம் முழுமையாக வளர பல ஆண்டுகள் தேவைப்படுகின்றன. மரத்தை வெட்டி என்ன செய்யப்போகிறீர்கள்?. மரத்தை வெட்டுவதற்குப் பதிலாக, வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடலாம்” என்று யோசனை தெரிவித்தனர். ‘பசுமைவழிச் சாலை திட்டத்தில் தமிழக அரசு, முறையற்ற முறையில் செயல்பட்டுள்ளதால், ஏன் இந்த திட்டத்தைத் ஓட்டுமொத்தமாக தடை விதிக்க கூடாது’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.