சிலை கடத்துபவர்களுக்கு ஆப்பு.! சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம்.. ஹைகோர்ட் அதிரடி

0
96

சிலை கடத்துபவர்களுக்கு ஆப்பு.! சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம்.. ஹைகோர்ட் அதிரடி

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பதவி வகித்த பொன்.மாணிக்கவேல் இன்று ஓய்வுபெறும் நிலையில், அவர் இன்னும் ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக பணியை தொடர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து சிலை கடத்தல் வழக்குகளையும், சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

pon-manickavel
pon-manickavel

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியானது. அதில், சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த ஹைகோர்ட் பொன் .மாணிக்கவேலை இன்னும் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பதவியில் இருந்து பொன்.மாணிக்கவேல் இன்று ஓய்வுபெறும் நிலையில் உயர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் என்ற அதிகாரியை தமிழக அரசு பணி நியமனம் செய்திருந்த நிலையில், பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக செயல்பட உள்ளார். அபய்குமார் சிங்கிற்கு பொன்.மாணிக்கவேல் ரிப்போர்ட் செய்ய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழக அரசு முயற்சிகளுக்கு உயர் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.