லிப்டில் மாணவி முன்பு இளஞர் செய்த மோசமான செயல்..! விடுதி காப்பாளரின் பதிலால் அதிர்ச்சியடைந்த மாணவிகள்!

0
105

லிப்டில் மாணவி முன்பு இளஞர் செய்த மோசமான செயல்..! விடுதி காப்பாளரின் பதிலால் அதிர்ச்சியடைந்த மாணவிகள்!

சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழக பெண் விடுதியில், ஒரு பெண்ணுக்கு லிப்ட் ஆபரேட்டர் பாலியல் தொந்தரவு கொடுத்தாக புகார் எழுந்ததால், பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமான மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது.

srm
srm

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் இயங்கி வரும் பிரபல தனியார் பல்கலைக் கழகத்தில் பெண்கள் விடுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் லிப்ட் ஆபரேட்டர் ஆக பணிபுரிந்து வருகிறார்.

இவர், நேற்று மாலை 3 மணியளவில் குறித்த பல்கழைகழத்தில் இளநிலை பட்டம் இரண்டாவது ஆண்டு படித்து வரும் வித்யா என்ற மாணவி 6-வது தளத்தில் இருக்கும் தனது ரூமிற்கு செல்வதற்காக லிப்டில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, லிப்ட் ஆபரேட்டராக பணிபுரியும் வடமாநில இளைஞர் குறித்த இளம்பெண்ணை பார்த்தவுடன் திடீரென ஆடைகளை களைந்து சுயஇன்பம் செய்துள்ளதாக தெரிகிறது.இதனால், அதிர்ந்து போன வித்யா லிப்டை நிறுத்துமாறு கதறியுள்ளார். இந்நிலையில், 4வது தளத்தில் லிப்ட் நின்றதும் கதவை திறந்து கதறியபடி ஓடியுள்ளார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த சக மாணவிகள், வித்யாவை நிதானப்படுத்தி விடுதி காப்பாளரிடம் அழைத்துச் சென்று புகார் செய்துள்ளனர்.ஆனால், இதை நம்பாத அந்த விடுதி காப்பாளர் முதலில் உன் ரூம் சென்று உன் ஆடைகளை மாற்று, உன் ஆடை தான் அவனை சுய இன்பம் கான தூண்டியிருக்கக் கூடும் என அசால்ட்டாக பதிலளித்துள்ளார்.

இதனால், மிகுந்த ஆத்திரமடைந்த மாணவிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பல்கலைக்கழக வளாகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது.

மேலும், சம்பவம் குறித்து பொலிஸில் புகார் எதுவும் கொடுக்காததாலும், 500க்கும் மேற்பட்ட மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாலும் பொலிசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர்.இந்நிலையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.